சென்னை இளைஞர்களுக்கும் உல்லாசமாக பொழுதை கழிக்க விரும்புபவர்களுக்கும் சென்னையில் இருந்து புதுவை வரை கிழக்கு கடற்கரை சாலையில் கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வருவது ஒரு ஜாலியான அனுபவமாகிவிட்டது.10 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். ரோடு) உருவானது. அப்போது சிறிய தார் சாலையாக இருந்தது. எதிர் எதிரே வரும் வாகனங்கள் வேகத்தை குறைத்துத்தான் விலகிச் செல்ல வேண்டும். ஆனால் சாலையின் பயன்பாடும், முக்கியத்துவமும் அதிகரிக்கவே இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது தரமான முக்கியமான சாலையாக மாறிவிட்டது.113 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலையையொட்டி ஆங்காங்கே இடையில் 154 கிராமங்களை இணைக்கிறது. வழி நெடுக ரிசார்ட்ஸ் தங்கும் விடுதிகள், கேளிக்கை மையங்கள், கடற்கரை இல்லங்கள், சிறுவர் பூங்காக்கள் என சுற்றுலா மையங்களுடன் சொர்க்கபுரியாக திகழ்கிறது. பொழுது போக்கு மையங்களான வி.ஜி.பி., எம்.ஜி.எம்., முட்டுக்காடு, கோவளம், முதலைப்பண்ணை, சுற்றுலா தலமான மகாபலிபுரம், கல்பாக்கம், முதலியார் சாவடி ஆகியவற்றை இணைக்கிறது.கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவைக்கு செல்ல நேரம் குறைவு. நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வதால் எப்போதும் பஸ்கள் நிரம்பி வழிகிறது. அதிக அளவில் பஸ்கள் வாகனங்கள் செல்வதால் பிசியான சாலையாக மாறிவிட்டது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த விபத்துக்களில் பாதசாரிகள், ரோட்டைக் கடந்தபோது 51 பேரும், வாகனங்கள் மோதிக்கொண்டதில் 122 பேரும் பலியாகி இருப்பதாக போலீஸ் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.விபத்தை குறைக்க கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்து 4 வழிச்சாலையாக மாற்ற தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து அரசிடம் விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. சாலை விரிவாக்கத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவது சம்பந்தமாகவும் ஆலோசனை நடந்து வருகிறது.ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் வெட்டப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 1990-ல் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இப்போதுள்ள போக்குவரத்து சூழ்நிலையை கருத்தில் கொண்டும், விபத்துக்களை தடுக்கவும், சாலை விரிவாக்கம் கண்டிப்பாக தேவை என்று போக்குவரத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.