பிப்ரவரி 29: முத்துப்பேட்டை அருகே உள்ள களப்பாலை சேர்ந்தவர் சண்முகநாதன். தலைமை ஏட்டு. இவரும், ஆயுதப்படை போலீஸ்காரரான லெனினும் நேற்று முத்துப்பேட்டை பழைய பஸ்நிலையம் அருகில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுரோட்டில் நின்று கொண்டு ஒரு வாலிபர் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட சண்முகநாதன் அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பணி செய்யவிடாமல் தகராறில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆலங்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்று தெரியவந்தது.
No comments:
Post a Comment