பிப்ரவரி 11: முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.
முத்துப்பேட்டை செக்கடிகுளத்தில் ஆக்கிரமிப்பு நடந்திருப்பாதாக கூறி குளத்தில் கரையில் உள்ள வீடுகள், பள்ளிவாசல் சுவர், நடைபாலம் இடிக்கப்பட்டது. மேலும் ரஹ்மத் பெண்கள்மேல் நிலைப்பள்ளி நுழைவாயிலில் ஆக்கிரமிப்பு நடந்து இருப்பதாக கூறி பள்ளியின் தடுப்பு சுவர் மற்றும் பள்ளியின் நுழைவாயில் அகற்றப்பட்டது. சுற்றுச் சுவரின் சில பகுதிகளை இடித்து அகற்றி விட்டு பள்ளி முன்புள்ள பாலத்தை உடைக்க முயன்றனர். அப்போது பள்ளி ஆசிரியைகள் மற்றும் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் கல்யாணசுந்தரம், மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செந்தில், கீழக்காடு ஊராட்சி தலைவர் மணி கண்டன், மமக மாவட்ட செயலாளர் தீன் முகம்மது மற்றும் பலர் திரண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து 09-02-2016 அன்று ரஹ்மத் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பேரூராட்சி முற்றுகையிட்டு பிறகு பள்ளிக்கு செல்லும்பாலத்தை உடைக்காமல் இருக்க பேரூராட்சி துணைத்தலைவர் அவர்களின் மனு கொடுக்கப்பட்டது. பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். முன் அனுமதி பெறாமல் பேரூராட்சியை முற்றிகையிட்ட முதல்வர் மற்றும் 130 பெற்றோர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment