ஜனவரி 21: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஆலங்காடு சுடுகாடு அருகே உள்ளது. சாலை ஒரம் உள்ள இந்த குப்பை கிடங்கில் சமீபகாலமாக பேரூராட்சி பணியாளர்கள் குப்பைகளை குப்பைகிடங்குக்குள் கொட்டாமல் அதன் வாசல்புறம் உள்ள சாலை ஓரத்தில் கொட்டிவருகின்றனர். இதனால் சாலை ஓரம் சுமார் 50 மீட் டர் தூரத்திற்கு குப்பைகள் தேங்கி கிடந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சாலை ஓரம் தேங்கி கிடந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீவைத்து விட்டனர். இதனால் குப்பைகள் எரிய துவங்கியது. சாலையில் வாகனங்கள் தெரியாத அளவுக்கு ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இது குறித்து முகமது மாலிக் கூறுகையில், கடந்த 5ம்தேதி கோயிலூர் பைபாஸ் அருகே குப்பையில் ஏற்பட்ட தீயால் புகை எழுந்து கண்ணை மறைத்ததால் விபத்து ஏற்பட்டு சிறுமி ஒருவர் இறந்தார். இந்நிலையில் அலட்சியமாக இங்கு குப்பை கொட்டி, தீயும் வைத்துள்ளனர். சாலை ஓரம் குப்பை கொட்டியவர்கள் மீதும், தீ வைத்தவர்கள் மீதும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விரைவில் பேரூராட்சி நிர்வாகம் மீது வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment