ஜனவரி 30: முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் டிராக்டர் டயரை திருடி விற்றது யார் என்று கவுன்சிலர்கள் காரசார விவாதம் நடத்தினர். இதனால் பேரூராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் குலோதுங்கன், துணைத்தலைவர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதம் வருமாறு:
ஜெகபருல்லா (திமுக): முத்துப்பேட்டை பகுதிக்கு தமிழக அரசின் இலவச பொருட்களை பெற்று தந்த பேரூராட்சி தலைவருக்கு நன்றி.
பாவா பகுருதீன் (சுயேச்சை): பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரில் நல்லநிலையில் இருந்த புதிய டயரை திருடி விற்பனை செய்து விட்டு பழைய டயரை வைத்துள்ளனர். இந்த செயலை செய்தது யார். இது போன்று பேரூராட்சிக்கு சொந்தமான பல பொருட்கள் திருடப்பட்டு வருகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதது ஏன் என்றார். அப்போது மற்ற கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து இது குறித்து விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இது குறித்து விசாரணை செய்து சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மற்றும் செயல் அலுவலர் கூறினர்.
கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த திமுக முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் முகம்மது ஹனீபா மறைவுக்கு இறங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் நாசர், சிவ.அய்யப்பன், ரத்தினகுமார், கிருஷ்ணன், செந்தில் குமார், தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment