டிசம்பர் 06: முத்துப்பேட்டை நகர SDPI கட்சியின் வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி கடலூர் நோக்கி புறப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, தூத்துகுடி என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மக்கள் உணவு உடைகள் பால் குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் SDPI கட்சியின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின் படி, இந்திய தேசம் முழுவதும் SDPI கட்சியினர் பொருளாதார நிதி திரட்டல்,
உடைகள் சேகரிப்பு, உணவு பொருட்கள், பிஸ்கட், குடிநீர் போன்ற பொருட்களும் சேகரிக்கப்படுகின்றன. அதனடிப்படையில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் சேகரிக்கப்பட்ட. பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பெட்டிகளில் வைக்கப்பட்டது.
அரிசி, சீனி பருப்பு, ரவை , கொண்டை கடலை, பிஸ்கட் பாக்கெட்டுகள் என முத்துப்பேட்டை நகர மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்களும் மூட்டைகளில் கட்டப்பட்டது. சற்றேறக்குறைய 1¾ டன் அரிசி, தாய்மார்களிடம் சேகரிக்கப்பட்ட 1078 புடவைகள், 17 பெட்டிகளில் ஆண்களுக்கான ஆடைகள், 7 பெட்டிகளில் பெண்களுக்கான ஆடைகள்,
12 பெட்டிகளில் சிறுவர்களுக்கான ஆடைகள், 2 பெட்டிகளில் புத்தம் புதிய ஆடைகள் என சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பொருட்கள் லாரி மூலம் ஏற்றப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment