துபாய் புர்ஜ் கலிஃபா புத்தாண்டு கொண்டாட்டங்களும் மற்றும் போக்குவரத்து மாற்ற விதிமுறைகளும்.
டிசம்பர் 31: 2016 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புர்ஜ் கலிஃபாவில் நடைபெறும் கொண்டாட்டத்தை காண வருவதற்கான போக்குவரத்து வழிகளை RTA அறிவித்துள்ளது.
Dec 31st இரவு 8 மணி முதல் Downtown Dubai பகுதியில் போக்குவரத்திற்கு அனுமதி கிடையாது. வாகனங்களை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்திவிட்டு பொது போக்குவரத்தை பயன்படுத்தவும். மெட்ரோ ரயில்,மோனோ ரயில்,டிராம் பஸ்,வாட்டர் டாக்சி மற்றும் பேருந்துகள் Dec 31st காலை 5 மணி முதல் ஜனவரி 2 இரவு 2 மணி வரை தொடர்ச்சியாக இயங்கும்.
புர்ஜ் கலிஃபா மெட்ரோ ரயில் நிலையம் குடும்பத்தோடு வருபவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேச்சிலர்கள் (Bachelors) Financial Centre மற்றும் Business Bay மெட்ரோ நிலையத்தை மட்டுமே பயன்படுத்த முடியும்.
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தை சுற்றி 6 கி.மீ சுற்றளவிற்குள் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கூடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நெரிசலை தடுக்க இரண்டு பாதசாரி வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெண்கள்/ குழந்தைகளோடு வருபவர்கள் மட்டுமே Family Path வழியை பயன்படுத்த முடியும். பெண்கள்/குழந்தைகளோடு வராதவர்கள் Bachelors Path வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் பேச்சிலர்கள் குடும்பத்தினர் பயன்படுத்தும் பாதைக்குள் நுழையக் கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் நுழைய பெண்கள்/குழந்தைகளோடு வந்திருக்கும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை. பேச்சிலர்கள் காத்திருந்து குடும்பத்தோடு வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க சொல்லி காவல்துறை கோரிக்கை.
Dec 31 அன்று இரவு நேர வெப்பநிலை 10- 12° செல்சியஸ் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் குளிர் தாங்குவதற்கு ஏதுவான ஆடைகளை அணிந்துவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Courtesy - Dubai Police & RTAThanks: நாகராஜ்
வீடியோ -2
No comments:
Post a Comment