டிசம்பர் 22: ஷார்ஜாவில் அழகிய சின்னஞ்சிறிய புதிய சுற்றுலா தீவு திறக்கப்பட்டது. மரங்கள் நிறைந்து இயற்கை சூழலோடு அமைந்த இத்தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்
ஷார்ஜாவில் 45,470 சதுர அடியில் சுமார் 80 மில்லியன் திர்மஸ் செலவில் பட்டர்பிளை வீடு,கலை பொருட்கள், ஏராளமான மரங்கள் அடங்கிய சிறிய அளவிலான நூர் தீவு மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
நீர் சூழ்ந்த இத்தீவில் பட்டாம்பூச்சிகளுக்கான வீடு உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வண்ண வண்ண பட்டாம் பூச்சிகள் அங்கு சிறகடித்து பறக்கிறது.மேலும் வெளிநாட்டு வகை அழகிய மரங்கள், நடைபாதை ,மரங்களால செய்யப்பட்ட பாலங்கள் என பல்வேறு பொழுது அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழங்கால பாறைகள் மற்றும் அழகிய கலை பொருட்கள் என ஏராளமானவை காட்சிக்கு வைக்கபட்டுள்ளது.
இத்தீவை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment