அக்டோபர் 25: அமீரகத்தில் முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் முகப்பு விளக்கு எரியவிடாமல் வாகனத்தை ஓட்டி அதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு அமீரகம் முழுவதும் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு முகப்பு விளக்கு எரியவிடாமல் இரவில் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். விதிமுறைகளை மீறி ஓட்டினால் திர்ஹம்ஸ் 200/-அபாரதமும், ஓட்டுனர் உரிமத்தில் 4 கருப்பு புள்ளிகளும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment