அக்டோபர் 26: முதுகுவலி என்பது முதுமையில் தான் வரும் என்பார்கள். ஆனால் இப்போது 20 - 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பலர் முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு என்ன காரணம்?
முதுகுவலிக்கு பல காரணங்கள் உள்ளன. நாம் படுக்கும் முறையும் முதுகுவலிக்கு முக்கிய காரணமாக உள்ளது. போம் மெத்தைகளும் காரணம் என்கிறார்கள். அதனால் போம் மெத்தைகளைத் தவிர்த்து, இலவம் பஞ்சு மெத்தை, பாய், ஜமுக்காளம் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது. உயரம் குறைவான தலையணைகள் முதுகுவலியை குறைக்குமாம்.
இருசக்கர வாகனகளில் நீட தூரம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேடு, பள்ளமான சாலைகளில் வேகமாக செல்லக்கூடாது. வாகனங்களில் முன்புறமாக வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
அலுவலகத்தில் பணி புரிபவர்கள் எப்போதும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடந்து பின்னர் மீண்டும் வேலையை தொடர வேண்டும்.
கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். நாற்காலியில் உட்காரும்போது எதிரே உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்கு தெரிந்தால் சரியாக உட்கார்ந்து இருகிறீர்கள் என்று அர்த்தம்.
நாற்காலியில் உட்காரும்போது பாதங்கள் தரையில் பதிய வேண்டும். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள். நாற்காலியில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.
நாம் அமர்ந்திருக்கும்போது நமது 40 சவீத எடையை பின் கழுத்துப் பகுதி எலும்புகளும், இடுப்பு பகுதி தசைகளும் தான் தாங்குகின்றன. அதனால் நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து இடுப்பு பகுதி நாற்காலியில் படும் படி அமர வேண்டும். தேவைப்பட்டால் முதுகுக்கு பின் குஷன் பயன்படுத்தலாம்.
கீழே இருக்கும் பொருட்களை தூக்கும் போது வளைந்து குனிந்து எடுக்காமல் காலை அகட்டிவைத்து தூக்கிப்பழகுவது நல்லது. கனமான பொருட்களை கையில் வைத்துக்கொண்டு அப்படியே திரும்பக்கூடாது.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடை பயிற்சியில் முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும். பெண்கள் எந்த காரணத்தை கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளை பயன்படுத்தக்கூடாது.
இதெயெல்லாம் முறையாக கடைப்பிடித்தாலே முதுகுவலியில் இருந்து எளிதில் தப்பலாம்.
No comments:
Post a Comment