அக்டோபர் 22: ஹரியானாவில் தலித் குழந்தைகளை எரித்த காட்டு மிராண்டி கும்பல்...!
ஹரியானாவில் தலித் குடும்பத்தை ஆதிக்க சாதியினர் தீயிட்டுக் கொளுத்தியதில் இரண்டு குழந்தைகள் உயிரோடு கொல்லப்பட்டனர்.
ஃபரீதாபாதில் குழந்தைகளின் பிணங்களுடன் டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில் தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீயிட்டுக் கொளுத்திய குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடல்களை அகற்ற மாட்டோம் என்று ஐஸ் கட்டிகள் மீது குழந்தைகளின் உடல்களை வைத்துள்ளனர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரைவிட்டு வெளியேறுமாறு எச்சரித்திருந்தனர்'.
உயர் சாதி வகுப்பைச் சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டதாக குழந்தைகளின் தந்தை ஜிதேந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார். சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தன்னை ஊரை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய உயர்சாதியை சேர்ந்த கும்பல் ஒன்று, மீறினால் தன்னையும் தன் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வோம் என அவர்கள் மிரட்டியதாகவும் தெரிவித்தார். தான் அந்த ஊரை விட்டு வெளியேற தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
டில்லி-ஹரியானா எல்லைப் பகுதியில் உள்ள ஃபரிதாபத் பகுதியில் சம்பவம் நடந்துள்ள சோன்பெத் கிராமத்தில் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக வாழ்வதாகவும், அங்கு ஒரு சில தலித் குடும்பங்களும் வசித்து வருவதால் அவ்வப்போது பிரச்சனைகள் நடைபெறுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. ஹரியானா காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment