முத்துப்பேட்டையில் கூரை வீட்டில் தீ விபத்து தீயை அணைத்து மாணவனை மீட்ட கட்டிட தொழிலாளர்கள். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, October 12

முத்துப்பேட்டையில் கூரை வீட்டில் தீ விபத்து தீயை அணைத்து மாணவனை மீட்ட கட்டிட தொழிலாளர்கள்.





அக்டோபர் 12: முத்துப்பேட்டையில் கூரை வீட்டில் தீ விபத்து தீயை அணைத்து மாணவனை மீட்ட கட்டிட தொழிலாளர்கள்.
முத்துப்பேட்டை கொய்யா தோப்பு நூர் பள்ளி அருகே ஏராளமான கீற்று வீடுகள் உள்ளன. இதில் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவரது கீற்றுக் கொட்டாகை கொண்ட காலணி வீடுகள் ஒன்று உள்ளது.


இதில் ஒரு வீட்டில் வீரமுத்து என்பவரது மனைவி விஜயா(37). வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் கணவரிடமிருந்து பிரிந்து தனது ஒரே மகனான 3-ம் வகுப்பு படிக்கும் சக்திவேலுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சக்திவேலுக்கு நேற்று பள்ளி விடுமுறை என்பதால் மாணவனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தாய் விஜயா தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுகளை மாணவர்கள் வீட்டிலிருந்து சேகரித்து பள்ளியில் கொண்டு சேர்ப்பதற்காக சென்று விட்டார்.

அவரின் வீட்டின் அருகே ஒரு கட்டிடத்தில் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர். அப்பொழுது மின் கசிவின் காரணமாக வீட்டில் உள் பகுதியிலிருந்து தீ பிடித்து பொருட்கள் எறிந்ததால் உள்ளே இருந்த மாணவன் சக்திவேல் கூச்சலிட்டான்.

இந்த அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள் கதவை திறக்க முயன்றனர். முடியவில்லை. அப்பொழுது வீட்டில் உள்புறம் எரிந்த தீ, கூரை வீட்டின் மேற்பகுதியிலும் தீ பிடித்து எறிய ஆரம்பித்தது.

இதனைக்கண்ட கட்டிடத்தொழிலாளர்கள் கண்ணுசாமி, ஜெயமுருகன், சீனிவாசன், குமாரசாமி ஆகியோர் அருகில் இருந்த கட்டிடத்திலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரைப் பிடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்பொழுது தொழிலாளர்கள் சிலர் தங்களது உயிரை பெரிதுப்படுத்தாமல் கூரை வீட்டின் மேலிருந்து வீட்டுக்குள் குதித்து உயிருக்கு போராடிய மாணவன் சக்தி வேலை உயிருடன் மீட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே பெரிய தீ விபத்து ஏற்படாமல் தொழிலாளர்களே தீயை போராடி அனைத்தனர். இதில் வீட்டிலிருந்து பல பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் மாணவனை உயிருடன் மீட்டும் வீட்டில் பரவிய தீயை பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் போராடி அணைத்த கட்டிடத்தொழிலாளர்கள் கண்ணுசாமி, ஜெயமுருகன், சீனிவாசன், குமாரசாமி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் மாணவன் சக்திவேல் ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்பு அருகே உள்ள கட்டிடத்தின் பில்லர் சுவர் விழுந்ததில் காயத்துடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

தகவல்: நிருபர் மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here