மார்ச் 08: நாகலாந்து சிறையில் இருந்து கடத்தி பொது இடத்தில் வைத்து முஸ்லிம் இளைஞர் படுகொலை.
நாகலாந்து மாநிலம் திமாப்பூர் மாவட்டத்தில் சிறைக்கதவை உடைத்து கற்பழிப்பு குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கைதியை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் இழுத்து வந்து நிர்வாணமாக ஊர்வலம் நடத்தி அடித்துக் கொலை செய்த சம்பவம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவி அழித்த புகாரின் பேரில் கடந்த மாதம் 24-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இது தொடர்பான விசாரனை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கற்பழிப்பு குற்றவாளியை தண்டிக்க கோரி சில வலதுசாரி மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பெருங்கூட்டம் திரண்டு சிறைச்சாலை கதவுகளை உடைத்தும் போலீசாரை தாக்கியும் சிறைக்கைதியை பல மைல்கள் நிர்வாணமாக இழுத்து வந்து கல்லெரிந்து படுகொலை செய்தனர்.
சம்பவம் அனைத்து ஊடகம் மற்றும் காவல்துறையின் முன்பே நடைபெற்றது. ஒரு கூட்டம் சட்டத்தை கையிலெடுத்து மரணதண்டனை வழங்கிய போது காவல்துறையினர் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படுகொலையில் மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர் பங்களாதேசில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்று சொல்லப்பட்டது. இது தவறான தகவல் எனவும் அவர் அஸ்ஸாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகன் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த பெண் அளித்த புகாரில் உண்மை இல்லை எனவும் அந்த பெண் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அதற்க்கு ஒப்புக்கொள்ளாததால் புகார் அளித்ததாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்
பட்டப்பகலில் அனைத்து ஊடகங்கள் முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் : தூது ஆன்லைன்
No comments:
Post a Comment