பிப்ரவரி 17: முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் மாணவர்க ளையும், பொதுமக்களையும் காயப்படுத்தி வரும் விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் திட்ட மதிப்பீடு செய்து ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு பணி யின் போது அந்த திட்டம் குறித்தும் மதிப்பீடு குறித்தும் விளம்பரம் செய்யப்பட்ட இரும்பு போர்டுகள் வைக்கப்பட்டது.
பணி முடிந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சம்மந்தப்பட்ட விளம்பர போர்டுகளை இதுநாள் வரை ஒப்பந்தகாரர்களோ பேரூராட்சி நிர்வாகமோ அகற்றவில்லை. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது தலையில் மோதி காயம் ஏற்பட்டு வருகிறது. இதில் பெரிய கடைத்தெரு மற்றும் புதுத்தெரு, பேட்டை சாலையில் உள்ள ஆவனா நேனா அரசு பள்ளி போன்ற இடங்களில் அதிகளவில் இந்த போர்டுகள் உள்ளன. இவற்றில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மோதி தலையில் காயமடைந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் இது நாள் வரை போர்டுகள் அகற்றப்படவில்லை. இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் KSH சுல்தான் இபுராஹிம் (சுனா இனா) கூறுகையில்:
மக்களையும், பள்ளி மாணவ, மாணவிகளையும் தினமும் காயப்படுத்தி வரும் அந்த இரும்பு பலகையை அப்புறப்படுத்த கோரி பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரியும் பலனில்லை. இனியும் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டினால் போராட்டம் நடத்தவும் தயங்க மாட் டோம் என்றார்.
No comments:
Post a Comment