ஜனவரி 07: நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கே. சேக்தாவூது அவர்களின் மகனும், M. அஷெய்கு முகம்மது, M. அபீஸ் முகம்மது (K.L) ஆகியோரின் தகப்பனாரும், N.M. அப்துல் சலாம், மர்ஹும் P. அய்யூப்கான், S. முபாரக், A. ஹாஜா நஜ்முதீன் ஆகியோரின் மாமானாருமாகிய இந்திய சுதந்திர போராட்ட தியாகி “ஹாஜி டாக்டர் கே எஸ் முஹம்மது தாவூது” (INDIAN NATIONAL ARMY) அவர்கள் நேற்று (06-01-2015) மாலை 5.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-01-2015) காலை 11 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அறிவிப்பு:
M.அஷெய்கு முகம்மது சகோதரர்கள்.
Cell: 97 89 16 03 77 .
இவரை பற்றிய சிறுகுறிப்பு:
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்தியன் நேஷனல் ஆர்மியில் பணிபுரிந்து வந்தவர். இந்திய தேசத்திற்காக வடஇந்திய பகுதியில் போரிட்டவர்களில் இவரும் ஒருவர். பர்மா ரங்கோனில் இருந்து கால் நடையாக இந்தியா வந்தார்.தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர். இவருடைய தமிழ் புலமையை பாராட்டி, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்திருக்கிறது. முத்துப்பேட்டை முத்துகவிஞர் என்றும் இன்பத் தமிழ் இலக்கணம் கண்டவர் என்றும் எல்லோராலும் அன்பேடு அழைக்கப்பட்டவர்.
தகவல்:
KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா ஈனா)
No comments:
Post a Comment