ஜனவரி 22: எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தசைபிடிப்பு, மூட்டு வலி, உள்ளிட்ட வியாதிகளை குணப்படுத்துவதற்காக முற்றிலும் இயற்கையான முறையில் இலை தலைகளை பயன்படுத்தி குணப்படுத்தி வரும் பெங்களுரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை காண்பதற்காக நான் பெங்களுரு சென்று இருந்தேன்.
பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் குறித்தும், குறிப்பாக தமுமுக வின் மூத்த தலைவரும்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி, SDPI கட்சியின் தலைவர் தெஹ்லான் பாக்கவி, முஸ்லீம் லீக் கட்சியின் அப்துல் ரஹ்மான், தேசிய லீக் கட்சியின் தடா ரஹீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே எம் ஷரீபு, வெல்பேர் கட்சி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தெந்த தொகுதிகள் ஏதுவாய் இருக்கும் என்ற டிஸ்கசனில் இருந்தோம்.
அப்போது திடீரென நாங்கள் தங்கியிருந்த அறைக்கு அருகே ஒரே பரபரப்பு. அறை வாசலிலேயே டிஸ்கஷனை நிறுத்திவிட்டு நானும் நண்பர்களும் வெளியே வந்து பார்த்தோம்.
பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ, அமைதியான தோற்றத்தில் ஒயிட் & ஒயிட் சூட்டில் காட்சியளித்தார் ஓர் அப்பா (தாத்தா ).பின்னர் ஆழமாக நோக்கியதில் தெரிந்து கொண்டோம் அவர்தான் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா என்று.
இன்ஷா அல்லாஹ்,மாஷா அல்லாஹ் என்று நாங்கள் நண்பர்களிடத்தில் பேசிகொண்டிருப்பதை கவனித்த மரியாதைக்குரிய எடியூரப்பா அவர்கள், எங்களை நோக்கி கையசைத்து அருகில் வரும்படி அழைத்தார்.
பின்னர் நாங்கள் அருகில் சென்றவுடன் அஸ்ஸலாமுஅலைக்கும் என்று கூறினார். பின்னர் நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளீர்களா என்று கேட்டார். ஆம் என்றோம் .
சிறிது உரையாடலுக்கு பின்னர் தண்ணீர் பகிர்ந்தளிப்பு தொடர்பாக இஸ்லாம் கூறும் அறிவுரைகளை எடுத்து கூறினோம். மேலும் KJP என்ற தனி கட்சியாக விளங்கியபோது மக்கள் செல்வாக்கு நன்றாக இருந்தது என்றும் கூறினோம். அதனை ஆழமாக செவிமடுத்த எடியூரப்பா அவர்கள்,தனது புன்னகையால் இசைவு தெரிவித்தார். இதனையடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம் .
பின்னர் அங்கு சூழ்ந்து இருந்த கர்நாடகா மக்களிடம் எடியூரப்பா அவர்களை பற்றி விசாரித்தோம், அவர் அனைவரிடத்திலும் சாதாரணமாக பழக கூடியவர் என்றும், தமிழ்நாட்டின் எம் ஜி ஆர் போன்றவர் என்றும் கூறினார்கள் .
இன்ஷா அல்லாஹ் மறுமுறை அவரை சந்திக்கும் வாய்புகள் ஏற்பட்டால், ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட தர்ஜுமத்துல் குரானை வழங்க வேண்டும் என்று நிய்யத்து செய்தவனாக விடை பெற்றோம் .
முத்துப்பேட்டை சேக்பரீத்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
No comments:
Post a Comment