குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கான புதிய மென்பொருளை UAE அரசு அறிமுகம் செய்துள்ளது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 8

குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கான புதிய மென்பொருளை UAE அரசு அறிமுகம் செய்துள்ளது.


டிசம்பர் 08: குழந்தைகளுக்கெதிரான கடத்தல்,பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல்கள் உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இவ்வேளையில் அத்தகைய நாசகார செயல்களிலிருந்து தமது நாட்டில் வசிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் முன் ஏற்பாடுகளை வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் செய்துள்ளது.

அந்த திட்டத்தின் அடிப்படையில் யுஏஇயின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் கடந்த அக்டோபர் மாதம் ஒரு மொபைல் அப்ளிகேசனை வெளியிட்டுள்ளது.

அந்த அப்ளிகேசனை பெற்றோர்கள் தங்களது மொபைலிலும்,பிள்ளைகளின் மொபைலிலும் தரவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் தங்கள் பிள்ளைகள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் பள்ளிக்கூடம் முடிந்து பள்ளியிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டனரா அல்லது பள்ளி முடிவடைவதற்கு காலதாமதங்கள் ஏதேனும் இருக்கிறதா என்கிற விபரங்களையும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வெளியில் சென்ற பிள்ளைகள் தாம் ஆபத்தில் சிக்கிக் கொண்டதாக உணர்ந்தால் அந்த மென்பொருள் வாயிலாக தமது பெற்றோருக்கு எச்சரிக்கை மணியடிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

HEMAYATI எனும் அந்த மென்பொருளை ஆப்பிள் ஸ்டோர்,கூகுள் ஸ்டோர் போன்ற இணையதள மென்பொருள் அங்காடிகளில் யுஏஇயில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கூகுள் அங்காடியில் டவுன்லோடு செய்ய…

உலக நாடுகள் இது போன்ற முன்னேற்பாடுகளை செய்து தமது நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

நமது இந்திய ஆட்சியாளர்கள் கேமரா மற்றும் போட்டோஷாப் போன்ற தொழில்நுட்பங்களில் மட்டுமே தீவிர கவனம் செலுத்துகிறார்களேயொழிய  இது மாதிரி உருப்படியான தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவது போல தெரியவில்லை..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here