டிசம்பர் 20: முத்துப்பேட்டையில் சாக்கடை கலந்த குடிநீருடன் பேரூராட்சிக்கு வந்த கவுன்சிலரால் பரபரப்பு..
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு நெய்யக்காரதெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் சுமார் 2 மாதகாலமாக சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி ஜூரம் மற்றும் தலைவலி போன்ற வியாதிகள் அடிக்கடி வருகிறது. இதனால் குடிநீரை குடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிக்கவும், சமையலுக்கு பயன்படுத்தவும் குடிநீர் தனியார் லாரிகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலரும், பொது மக்களும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வில்லை. இதனால் விரக்தி அடைந்த பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் ஜகபருல்லா நேற்று காலை சாக்கடை கலந்த அந்த குடிநீரை பாட்டில்களில் அடைத்து பேரூராட்சி அலுவலகத்துக்கு எடுத்து வந்தார.; பின்னர் அந்த குடிநீரை அதிகாரிகளிடம் கொடுத்து குடித்து பார்க்க சொல்லி இதை தான் எங்கள் பகுதி மக்கள் குடித்து வருகிறார்கள். இதனை எப்பொழுது சரி செய்வீங்க? என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
படம்செய்தி
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு சாக்கடை கலந்த குடிநீரை எடுத்து வந்த 7-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஜகபருல்லா
தகவல்
நிருபர் முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment