டிசம்பர் 10: ‘தினத்தந்தி’ யின் துபாய் பதிப்பு தொடக்க விழா நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா பங்கேற்றனர்.
17-வது பதிப்பு
தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்திருக்கிறது. ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களில் இருந்து ‘தினத்தந்தி’ வெளி வருகிறது. 17-வது பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெற்றுள்ளது.
வளைகுடா பகுதியில் அசைக்க முடியாத மையமாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஏராளமான இந்தியர்களும், குறிப்பாக தமிழர்களும் வசிக்கிறார்கள். இவர்களின் நீண்டகால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது 17-வது பதிப்பை துபாய் நகரில் தொடங்கி உள்ளது.
தொடக்க விழா
இதற்கான தொடக்க விழா துபாய் அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிகை (கலதாரி பிரிண்டிங் மற்றும் வெளியீட்டு நிறுவனம்) அலுவலகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் கலந்து கொண்டு எந்திரத்தின் பொத் தானை அழுத்தி தொடங்கி வைத்ததுடன் முதல் பிரதியையும் வெளியிட்டார்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரசன்னா, நடிகை சினேகா ஆகியோர் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனின் மகன் பா.சிவந்தி ஆதித்தன், கலீஜ் டைம்ஸ் முதன்மை செயல் அலுவலர் காலித் சுலைமான், துணை தலைவர் சாகிர் அஹமது, எக்சிகியூட்டிவ் எடிட்டர் பேட்ரிக் மைக்கேல், இந்திய கான்சுலேட் ஜெனரல் மீடியா கன்சல் அனிதா நந்தினி, தவ்சீல் நிறுவன மேலாண்மை செயல் இயக்குனர் ஜமால் சல்மான் கவுர், முதன்மை வணிக அலுவலர் நோபல் ஆர்.பொலாத், லேண்ட் மார்க் ஓட்டல்கள் மற்றும் ஜீனத் ரியல் எஸ்டேட் குழும இயக்குனர்கள் சையத் முகம்மது சாதிக் மற்றும் ஹமீது மொய்னுதீன் சாதிக், தொழில் அதிபர் ஜே.எம்.இக்பால், சங்கனி நிறுவன இயக்குனர் கவுரிசங்கர், ‘ஹலோ எப்.எம்.’ ஆர்ஜேக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமீரகம் முழுவதும் கிடைக்கும்
‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் இதழ், இன்று (புதன்கிழமை) முதல் தினமும் காலையில் அமீரகம் முழுவதும் கிடைக்கும். ‘தினத்தந்தி’ துபாய் பதிப்பின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளுடன் உள்ளூரில் நடக்கும் அனைத்து செய்திகளும் உடனுக்குடன் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.
தகவல் வீகளத்தூா.in
No comments:
Post a Comment