அக்டோபர் 18: உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில்,
பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை
திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால்
உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்'
என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
"புர்ஜ் கலீஃபா - ஸ்கை'
எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர்
மாடம், தரைமட்டத்திலிருந்து 555
மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில்,
கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து
கொண்டனர்.
அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு,
வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர்
தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே
தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இந்த புதிய கின்னஸ் சாதனை, புர்ஜ் கலீஃபாவின் மகுடத்தில் மற்றுமோர் வைரம்
ஆகும்'' என்று பாராட்டினார்.
தகவல்: வீகளத்தூர்.in
No comments:
Post a Comment