முத்துப்பேட்டையில் பெரியார் சிலைக்கு அமைத்த இரும்பு கூண்டு அகற்றம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, October 8

முத்துப்பேட்டையில் பெரியார் சிலைக்கு அமைத்த இரும்பு கூண்டு அகற்றம்.


அக்டோபர் 10: திராவிடர் விடுதலை கழகம் போராட்ட அறிவிப்பு காரணமாக முத்துப்பேட்டையில் பெரியார் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு கூண்டு அகற்றப்பட்டது.
முத்துப்பேட்டையில் கடந்த வாரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக நகர செயலாளர் அருணாசலம் இரும்பு கூண்டு அமைத்தார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தொவித்ததால் கூண்டு அகற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியா ரின் முழு உருவ சிலைக்கு சட்டம்,ஒழுங்கை காரணம் காட்டி திடீரென இரும்பு கூண்டு அமைத்தனர். இதை உடனடியாக அகற்றக்கோரி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் காளி தாசு தலைமையில் மன்னார்குடி ஆர்டிஓவிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் திருவாரூர் மாவட்ட நிர் வாகம் இந்த பிரச்னை யில் உடனடியாக தலை யிட்டு பெரியார் சிலைக்கு போடப்பட்ட இரும்புக்கூண்டை அகற்ற வேண்டும். காலதாமதமானால் வரும் 11ம் தேதி திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத் தூர் மணி தலை மை யில் போராட்டம் நடை பெறும் என காளிதாசு அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பெரியார் சிலைக்கு போடப்பட்ட இரும்புக்கூண்டு அகற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here