அக்டோபர் 18: முத்துப்பேட்டை பழைய பஸ்டான்ட் ஆட்டோ ஸ்டான்ட் (பட்டரைக்குளம்) அருகில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட அடிப்பைப்பு ஒன்று பலமாதங்களாக பழுதுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள் சிரமபட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி ஆட்டோ சங்க நிர்வாகியும், அ.தி.மு.க வார்டு செயலாளருமான KSH சுல்தான் இபுராஹிம் (சுனா இனா) பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் சீர் செய்யவில்லை.
இதனால் வெறுத்துப்போன சுல்தான் இபுராஹிம், நேற்று காலை முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலம் சென்று வழக்கம் போல் புகார் தெரிவித்தார். அதிகாரிகளும் வழக்கம் போல் பதில் கூறி அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுல்தான் இபுராஹிம் பேரூராட்சிக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு பேரூராட்சி வாசலில் உக்காந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பொழுது அங்கு இருந்த பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் வகாப், பேரூராட்சி பிளம்பரிடம் உடன் சரிசெய்ய கூறிவிட்டு பைக்கில் ஏறி செல்ல முயச்சி செய்தார். இதனைக்கண்ட சுல்தான் இபுராகிம், அவரது பைக்கை மறைத்து பேரூராட்சியின் கேட்டை மூடி 'உடன் வேளைக்கு ஆள் சென்றால் தான் உங்களை விடுவேன்' என்று ரகளையில் ஈடுபட்டார். அதன்பின்னர் பேரூராட்சி பிளம்பர் காஸ்டா தலைமையில் ஊழியர்கள் சென்று பழுதான அடி பைப்பை சரிசெய்தனர். அ.தி.மு.க பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவரே போரட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை
புகைப்படம்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment