முத்துப்பேட்டையில் நடைபெற்ற நாட்டு நலப்பணி முகாம் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 9

முத்துப்பேட்டையில் நடைபெற்ற நாட்டு நலப்பணி முகாம் !

முத்துப்பேட்டை அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தில்லைவிளாகம் ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று  வந்தது. ரோட்டரி சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். காலை நேரத்தில் கழுவங்காடு, கீழக்கரை, தெற்குக்காடு, செங்காங்காடு,  அரமங்காடு, தில்லைவிளாகம் போன்ற பகுதிகளில் பள்ளி வளாகம், சாலைகள், கோயில் பகுதிகள் போன்ற இடங்களில் தூய்மை பணி கள் மேற்கொள்ளப்பட்டது. மாலை நேரத்தில் உடல் நலத்தில் மனவளக்கலை, யோகா, சுற்றுசுழல் பாதுக்காப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை பொருட்களின் தீமைகள் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சி தில்லைவிளாகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ரெங்கசாமி மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினார். முன்னதாக திட்ட அலுவலர் ராஜேந்திரன் முகாம் அறிக்கை வாசித்தார். உதவி அலுவலர் சதீஸ்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here