வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்துக்கு 12.36% சேவை வரி மத்திய அரசு அதிரடி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 25

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்துக்கு 12.36% சேவை வரி மத்திய அரசு அதிரடி.


அக்டோபர் 25: வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு பணம் பெற்றுகொள்வோர் 12.36% சேவை வரியை செலுத்த வேண்டும் என்ற மத்திய நிதியமைச்சக உத்தரவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர்கள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு பணம் அனுப்புவதற்காக முன்பு குருவி, ஏஜென்ட் ஆகியோரிடம் பணத்தை கொடுத்து அனுப்பினர். இவ்வாறு அனுப்பப்படும் பணம் இந்திய நிதியமைச்சகத்தின் கணக்கில் வராமல் இருந்தது. இந்த பணம் ஹவாலா என்று அழைக்கப்பட்டது. இந்த நடைமுறையில் பணம் இந்தியாவிற்குள் வரும்போது போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. பல இடங்களில் இந்த பணம் கொண்டு செல்வதை கண்காணித்து கொள்ளையடிக்கப்பட்டது. இதை தடுப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்படுவதை மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி சில நிறுவனங்கள் பணம் அனுப்புவோரிடம் கமிஷன் தொகையை பெற்று கொண்டு, இந்தியாவில் உள்ளவர்களிடம் எவ்வித கமிஷனும் பெறாமல் பணத்தை வழங்கி வந்தது.

அதன்படி இந்தியாவில் வெஸ்டர்ன்யூனியன், எக்ஸ்பிரஸ் மணி, மணிகராம், ட்ரான்ஸ் ஃபாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் மூலை முடுக்கெல்லாம் தங்கள் நிறுவன கிளைகளை திறந்து வெளிநாட்டிலிருந்து பணத்தை பெற்று இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கி வந்தது. அதே நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை இந்தியாவில் உள்ளவர்கள் பெற்று கொள்ளும் நடைமுறை இருந்து வந்தது. இதற்காக இந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம் 0.6 சதவீதம் முதல் அதிகபட்சமாக 0.9 சதவீதம் வரை கமிஷன் பெற்று இந்த சேவையை செய்து வருகிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் நிதி வரவில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அரசுக்கு வரியாக கட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் கடந்த 14ம் தேதி முதல் அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், 'இனிமேல் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் எந்த நிதிக்கும் சேவை வரியாக 12.36% விதிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் நிதி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு ஆண்டுக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமான வரியாக சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் அதைவிட அதிக வருவாய் பெற வேண்டும் என்பதற்காக நிதியமைச்சகம் சேவை வரி விதித்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பலர் சேவை வரியை செலுத்துவதற்கு பதிலாக மீண்டும் ஹவாலா முறைக்கு மாற வழிவகுத்து விடும். ஒரு வார காலமாக சேவைவரியை இந்த நடைமுறை மூலம் விதிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய நடைமுறையை கொண்டு வர மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here