SSLC தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, May 23

SSLC தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.


மே 23: SSLC தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை.
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் நான்காவது இடத்திலும் மாவட்ட அளவில் இரண்டாவது இடத்ததை பிடித்து சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அளவில் முதல் இடத்தில்  19 மாணவ மாணவியர்கள்  500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் இரண்டாமிடத்தை 125 மாணவ மாணவியர்கள் 500 மதிப்பெண்களுக்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளனர்

மாநில அளவில் மூன்றாமிடத்தை 321 மாணவ மாணவியர்கள் 500 மதிப்பெண்களுக்கு 497 மதிப்பெண் பெற்றுள்ளனர்

பட்டுக்கோட்டை சுக்கிரன்பட்டி பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மகேஷ் லக்கிரு மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். அவர் பெற்ற மதிப்பெண்கள் 499.

இந்த வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் ரஹ்மத் பெண்கள் மேல் நிலைப்பள்ளி 100 %தேர்ச்சி பெற்றுள்ளது.

மாநில அளவில் நான்காவது இடத்திலும் மாவட்ட அளவில் இரண்டாவது இடத்ததை பிடித்து சாதனை படைத்துள்ளது.

1 மாணவி கணித பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
22 மாணவிகள் அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.
10 மாணவிகள் சமூக அறிவியல் பாடத்தில் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்

490  மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவிகள் எடுத்துள்ளனர். 480  மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவிகள் எடுத்துள்ளனர். 470  மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவிகள் எடுத்துள்ளனர். 450  மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவிகள் எடுத்துள்ளனர். 400  மதிப்பெண்களுக்கு மேல் 38 மாணவிகள் எடுத்துள்ளனர்.

முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்
1. K. பாலசுந்தரி 496/500
2. S. காவியா- 494/500
3. S. ஷஃபான பர்வின்- 491/500

வெற்றி பெற்றவர்களை பாரட்டி மகிழும் பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்.

வெற்றி பெற்ற் மாணவிகளுக்கு முத்துப்பேட்டை.org  மற்றும் முத்துப்பேட்டை பிபிசியின் சார்பாக பாரட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
www.muthpet.org, www.muthupet.com
www.muthupettaibbc.blogspot.com


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here