முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கபட்டுள்ளார். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, January 13

முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கபட்டுள்ளார்.


ஜனவரி 13: காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS. அவர்கள். முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே உள்ளது சகோதரர் மன்சூர் அவர்களின் வீடு.. இனிமை, எளிமை, பொறுமை, மற்றும் ஆளுமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருபவர் மன்சூர். 
கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல் சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர். .ஐந்து வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர். தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர். 
பின்னர் டெல்லியில் உள்ள இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். 
இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்வோம். ஆமீன்.
முத்துப்பேட்டை பிபிசியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here