டிசம்பர் 28: முத்துப்பேட்டையில் கனரா வங்கியை திறந்து வைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடராஜன்.
படம் செய்தி :
முத்துப்பேட்டையில் கனரா வங்கி திறப்புவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஈஸ்டன்அலி முன்னிலை வகித்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வங்கியின் கட்டிடத்ததை திறந்துவைத்து பேசுகையில் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் இந்த வங்கி திறந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
நாளடைவில் முத்துப்பேட்டை நகரில் ஒரு அடி இடம் தேர்வு செய்வதற்குகூட சிரமமாக இருக்கும். காரணம் உலகப் புகழ்பெற்று வளங்கும் அலையாத்தி மாங்ரோ காடுகள் நிறைந்த லகூன் பகுதியின் வளர்ச்சி கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு சுற்றுலாத்தளமாக அறிவித்து செயல்பட இருக்கிறது. அதனால் ஊரின் வளர்ச்சி அதிகரிக்கும். அப்பொழுது இதுபோன்று இடம் கிடைப்பது அரிது. சரியான நேரத்தில் இந்த இடத்தை தேர்வு செய்து வங்கியை திறக்கப்பட்டுள்ளது.
லகூன் பகுதி போன்று இந்த வங்கியின் வளர்ச்சியும் பெருக வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), வர்த்தக கழக தலைவர் ராஜாராம், முன்னாள் பேராட்சி துணைத் தலைவர் மாணிக்கம், திமுக நிர்வாகி காதர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது மாலிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் காளிமுத்து உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படம் செய்தி :
முத்துப்பேட்டையில் நேற்று கனரா வங்கியை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேசினார்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை


No comments:
Post a Comment