பள்ளிவாசல் எதிரே குப்பைகளை கொட்டுவகற்கு எதிர்ப்பு, டிராக்டரை மறைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 6

பள்ளிவாசல் எதிரே குப்பைகளை கொட்டுவகற்கு எதிர்ப்பு, டிராக்டரை மறைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு.




நவம்பர் 06: பள்ளிவாசல் முன்பு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – தெருக்களில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை இதனை கண்டித்து பொதுமக்கள் பேரூராட்சி டிராக்டரை மறைத்து முற்றுகையிட்டதால் பரபரப்பு .
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் . இந்த நிலையில் நகர் முழுவதும் குப்பைகள் பேரூராட்சி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுகள் உற்பத்தி ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அல்லபடாததை கண்டித்தும், கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்தும் நேற்று கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் குப்பை சேகரிக்க வந்த பேரூராட்சி டிராக்டரை அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ அயுப்கான், ஹமீது கட்டி , சஃபான் மற்றும் பொதுமக்கள் வழிமறைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூடினார்கள் . சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி ஆகியோர் சிறை பிடித்த மக்களிடம் இனிமேல் பள்ளிவாசல் முன்பு குப்பைகள் கொட்டமாட்டோம் . வார்டு பகுதியில் நாளை முதல் உடனக்குடன் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் சிறைபிடித்த டிராக்கடரை பொதுமக்கள் விடுவித்தனர் .
படம் செய்தி .
1. முத்துப்பேட்டை 8-வது வார்டு பகுதியில் குப்பைகள் உடனுக்குடன் அல்லப்படாததை கண்டித்து பேரூராட்சி டிராக்டரை சிறைபிடித்த காட்சி .

2. பேச்சு வார்த்தை நடத்தும் போலிசார்.

தகவல்: நிருபர் முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here