சவூதி இந்திய துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 13

சவூதி இந்திய துணைத் தூதரகம் அவசர அறிவிப்பு!


Consulate-India

நவம்பர் 13: சவூதி நிதாகத் சட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்டு இந்தியா செல்ல இயலாதவர்களுக்கு, சவூதி ஜித்தா இந்திய துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"சவூதி நிதாகத் புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக தங்கியிருந்து நாடு செல்ல அனைத்து ஆவணங்களுக்கான வேலைகளும் முடிந்து, கைரேகை மற்றும் தூதரகத்தால் வழங்கப்பட்ட அவசர கடவுச் சீட்டு அல்லது தங்களது ஒரிஜினல் கடவுச் சீட்டு(passport) மற்றும் தர்ஹீல் வேலைகள் முடிந்தும், விமான நிலையங்களிலிருந்து பயண எண் (Bayaan Safar) இல்லாமல் திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள் அனைவரும் உடனடியாக இந்தியத் தூதரங்களை அணுகுமாறு வேண்டப்படுகிறார்கள்.
ஏற்கனவே இந்தியத் தூதரகத்தால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் மீண்டும் கொண்டு வந்து, தூதரகங்களில் இருக்கும் அதிகாரிகளிடம் சமர்பித்து அவர்கள் மூலம் சரி செய்து, பயண எண்கள் மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது இந்தியத் தூதரகத்தின் அவசர அறிவிப்பாகும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழஙகப்படும். இந்த வாய்ப்பைப் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
மேற்கண்டவாறி சவூதி இந்திய தூதரகத்தின் பத்திரிகை மற்றும் தகவல் பிரிவு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here