டிரைவர்கள் போதைப்பொருட்கள் சாப்பிட்டால் ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள் அதிரடி தீர்மானம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, October 14

டிரைவர்கள் போதைப்பொருட்கள் சாப்பிட்டால் ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள் அதிரடி தீர்மானம்.


டிரைவர்கள் போதைப்பொருட்கள் சாப்பிட்டால் ஆட்டோ சங்கத்திலிருந்து நீக்கப்படும். முத்துப்பேட்டை ஆட்டோ சங்க கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
அக்டோபர் 14:  முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ சங்கம் பொதுக்குழுகூட்டம் தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜெகபருல்லா மூத்த உறுப்பினர் சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சங்கர் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் காரச்சார விவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் பான்பராக், கான்ஸ் போன்ற போதைப் பொருட்கள் மதுக்கள் கண்டிப்பாக அருந்தக் கூடாது. அப்படி மீறும் டிரைவர்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அதிரடியாக நீக்ப்படுவார்கள். உறுப்பினர்கள் தங்களது சக டிரைவர்களுடன் மனக்கஷ்டம் வராத அளவுக்கு நடந்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும். மத்திய அரசு அடிக்கடி பெட்ரோல் டீசல் விலை உயர்வை உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுனர்கள் பல கஷ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனை கண்டிக்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார்.
படம் செய்தி :முத்துப்பேட்டை ஆட்டோ சங்கம் கூட்டம் நேற்று தலைவர் பாக்கர் அலி தலைமையில் நடைபெற்றது.

தகவல்: முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here