அக்டோபர் 26: முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் : 400 கோடி ரூபாய் ஒதுக்கி நிதிஷ்குமார் தொடக்கம்!
பீகார் மாநிலத்தில் (மானியத்துடன் கூடிய) பல்வேறு கடன் திட்டங்கள் அமலில் இருந்தாலும், அதில் வட்டிக் கலப்பு இருப்பதால், முஸ்லிம்கள் அக்கடன் திட்டங்களைப் பயன்படுத்துவதில்லை.
அரசு கொடுக்கும் மானியமும் வேண்டாம்; வட்டியால் உண்டாகும் சாபமும் வேண்டாம், என்பதில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருந்து கடன் திட்டங்களைப் பயன் படுத்தாமல் இருந்தனர்.
அதாவது 1 லட்சம் ரூபாய் கடன் தொகையில் அரசின் சார்பில் 15% மானியம் என்ற அடிப்படையில் ரூ.15,000 தள்ளுபடி கிடைத்தாலும், ஆண்டுக்கு 10% வட்டி என்று 3 ஆண்டுகளில் ரூ 30,000 அளவுக்கு வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, முஸ்லிம்களுக்கும் அரசின் கடன் உதவி திட்டங்களின் பயன்கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், 400 கோடி ரூபாய் மூலதனத்தில் வட்டியில்லா கடன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
பீகாரை சேர்ந்த முஸ்லிம்கள், மும்பை உள்ளிட்ட நாட்டின் எப்பகுதியில் வசித்தாலும் - வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தாலும் இந்த கடன் திட்டத்தின் பயனை அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment