செப்டம்பர் 11: காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் தஞ்சையில் மழை பெய்தது. நேற்று முதல் இன்று காலை 8.30 மணிவரை (24மணிநேரம்) பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு–
கல்லணை–12.8, திருக்காட்டுப்பள்ளி–3.2, தஞ்சாவூர்–4.2, அய்யம்பேட்டை–6.0, நெய்வாசல் தென்பாதி–4.8, பூதலூர்–0.4, வெட்டிக் காடு–5.4, பேராவூரணி–2.8, ஒரத்தநாடு–9.6, மதுக்கூர்–4.2, பட்டுக்கோட்டை–3.0, நீடாமங்கலம்–1.4, திருத்துறைப்பூண்டி –11.2, முத்துப்பேட்டை– 43.6, கோரையாறு–2.4, தலை ஞாயிறு–18.4, திருப்பூண்டி– 13.0, வேதாரண்யம்–3.2.
அதிகபட்சமாக முத்துப்பேட்டையில் 43.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 42.2 மி.மீட்டர் மழையும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 51.0 மி.மீட்டர் மழையும் பெய்தது. இன்று ஒரத்தநாட்டில் 9.6 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் மயிலாடுதுறையில் மழை பெய்யவில்லை.
கல்லணையில் இருந்து இன்று காலையில் காவிரி ஆற்றுக்கு 800 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றுக்கு ஆயிரத்து 301 கனஅடி தண்ணீரும், கல்லணை புதுஆற்றுக்கு 2ஆயிரத்து517 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 4 ஆயிரத்து 614 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கு நேற்று கல்லணையில் இருந்து 518 கனஅடி தண்ணீரும் கோவிலடி சேனலுக்கு 5 கனஅடி தண்ணீரும், பிள்ளைவாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கொள்ளிடம், கோவிலடி சேனல், பிள்ளை வாய்கால் ஆகிய ஆறுகளுக்கு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment