தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கூடம் செல்லலாம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 14

தமிழகத்தில் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கூடம் செல்லலாம்.

செப்டம்பர் 14: தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கூடம் செல்லலாம் என்ற அரசு ஆணையை நாம் சமீபத்தில் கண்டோம்.
இறைவனின் மாபெரும் கிருபையினால் அரசின் இந்த ஆணையை அறிந்தவுடன் நம் சகோதரிகள் களம் இறங்கிவிட்டனர்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் உள்ள முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் ஹிஜாப் அணிய அனுமதி மறுத்துள்ளார். இதோ அரசின் ஆணை இருக்கிறது என்பதால் நாங்கள் ஹிஜாபுடன் தான் இருப்போம் என்று மாணவிகள் கூற…இது திருவாரூர் மாவட்டத்திற்கு தான் பொருந்தும். தஞ்சை மாவட்டத்திற்கு பொருந்தாது என்றும் நீங்கள் தஞ்சை மாவட்டத்திலிருந்து அரசு ஆணை வாங்கி வாருங்கள் நாங்களும் அனுமதியளிக்கிறோம் என்றும் தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
அரசு ஆணை என்பது திருவாரூர் மாவட்டத்துக்கு தனி, தஞ்சை மாவட்டத்திற்கு தனி என்றெல்லாம் கிடையாது. அரசின் ஆணை மாநிலம் முழுவதுக்கும் ஒரே ஆணை தான். தகவல் அறியும் உரிமை சட்டத்தை வழங்கிய அலுவலகம் திருவாரூர் மாவட்டம் என்பதால் அந்த கடிதத்தில் திருவாரூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் மதுக்கூரை சேர்ந்த சகோதரர்கள் பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி விளக்க வேண்டும்.
தலைமையாசிரியர் மீறும் பட்சத்தில் அவர் மீது வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கையையும் செய்ய மறக்க வேண்டாம். அரசின் ஆணை இருக்கிறதா என்று அவரையே மாவட்ட கல்வித்துறையை தொடர்பு கொண்டு விசாரிக்க சொல்லுங்கள் என்றும் மதுக்கூர் சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன். இதேபோல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு பள்ளி முஸ்லிம் மாணவிகள் வரக்கூடிய திங்களன்று ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்லுங்கள்.
சில அரசு பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தாலும் பள்ளியின் உள்ளே நுழைந்ததும் ஹிஜாபை கழட்டி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். பள்ளியின் உள்ளே நுழைந்த பிறகும் நாங்கள் ஹிஜாபை கழட்ட மாட்டோம் என்று தெள்ளத் தெளிவாக கூறி விடுங்கள். அரசின் ஆணை ஹிஜாப் அணிந்து வர அனுமதித்து இருப்பதால் யாரும் அதை தடுக்க முடியாது என்பதை நினைவில் கொண்டு உறுதியோடு இருங்கள்.
பள்ளி ஆசிரியர்கள் அனுமதி தர மறுப்பார்களேயானால்… நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்களுடைய ஊர்களிலுள்ள முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் இது பற்றி கூறுங்கள். அவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டியதை உதவிகளை அவர்களே முன்னின்று செய்து தருவார்கள். உங்களால் உள்ளூர் முஸ்லிம் இயக்கங்களை தொடர்பு கொள்ள இயலாவிட்டால் நமது தளத்திற்கு உங்களுடைய ஊர் பெயர், மாவட்டத்தின் பெயரை குறிப்பிட்டு இன்பாக்சிற்க்கு தகவல் தரவும்.
நாம் உங்களுடைய ஊர் முஸ்லிம் அமைப்பினரை தொடர்பு கொண்டு உங்களை தொடர்பு கொள்ள செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்…

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here