ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டை அருகே விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இன்ஜினியரிங் மாணவி, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று சுகாதார துறை செயலர் கூறினார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் நிவேதிதா (21), அரியலூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ சேர்ந்தார். விடுதியில் தங்கியிருந்த இவர், இறுதியாண்டு படித்த போது, கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். பல்வேறு டாக்டர்களிடம் காட்டியும் நோய் குணமாகவில்லை. நோய் என்னவென்றே தெரியாத நிலையில், 50 கிலோ எடையிருந்த நிவேதிதா, 25 கிலோவாக மெலிந்து உயிருக்கு போராடி வருகிறார்.
நிவேதிதா குடும்பம் வறுமையில் வாடுகிறது. சிகிச்சைக்காக அவரது பெற்றோர் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலமும் சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள், நிவேதிதாவை சந்தித்து பல்வேறு உதவிகளை செய்தனர். தகவல் அறிந்த தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெற்றோரிடம் பேசி நிவேதிதாவை சென்னைக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
அதன்படி, நிவேதிதாவை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். நிவேதிதா கூறும்போது, நான் கண்டிப்பாக நல்ல நிலையில் திரும்புவேன். எனக்காக உதவியவர்களுக்கு சேவை செய்வேன் என்றார். தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், Ôபாதிக்கப்பட்ட மாணவி நிவேதிதா முழுமையாக குணமடைய அனைத்து மருத்துவ உதவிகளும் அரசு சார்பில் செய்யப்படும் என்றார்.
No comments:
Post a Comment