ஆகஸ்ட் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூரை சேர்ந்தவர்கள் குமரவேல், முருகேசன், நடராஜன், முனியப்பன். இவர்கள் 4 பேரும் பட்டுக்கோட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற தனியார் பஸ்சில் பயணம் செய்தனர்.
பஸ்சின் கண்டக்டராக ரமேஷ் இருந்தார். அவர் 4 பேரிடமும் டிக்கெட் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு உருவானது. பின்னர் பஸ் திருத்துறைப்பூண்டி சென்று விட்டு மீண்டும் பட்டுக்கோட்டை வந்தது. அப்போது குமரவேல், முருகேசன், நடராஜன், முனியப்பன் ஆகிய 4 பேரும் பஸ்சை வழி மறித்தனர். பின்னர் கண்டக்டர் ரமேசை சரமாரி தாக்கினார்கள். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டக்டரை தாக்கிய குமரவேல், முருகேசன், நடராஜன், முனியப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment