ஈரானில் பலமான நில நடுக்கம்! அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 16

ஈரானில் பலமான நில நடுக்கம்! அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து.



ஏப்ரல் 16: ஈரானில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.8 7.6 என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாய், ஆப்கானிஸ்தான், கத்தார்,பஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின
துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட‌ அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் நில‌ந‌டுக்க‌ம் உண‌ர‌ப்ப‌ட்ட‌து. இதன் தாக்கத்தால் அமீர‌க‌த்தின் மற்றும் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் த‌ங்க‌ள் க‌ட்டிட‌த்தை விட்டு தெருக்க‌ளில் காத்திருந்த‌ன‌ர்

இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும், டெல்லி குர்காவோன் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு சில வினாடிகள் உணரப்பட்டது. டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று மாலை இந்திய நேரப்படி 4.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அதே நேரத்தில் இது 7.6 முதல் 7.8 புள்ளிகளாக இருந்ததாக ஈரான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 40 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Type: Earthquake
Magnitude: 7.8
DateTime: Tuesday April 16 2013, 04:14:20 india time
Region: Iran-Pakistan border region
Depth: 82 km
Source: USGS Feed

Type: Earthquake
Magnitude: 7.7
DateTime: Tuesday April 16 2013, 04:14:11 india time
Region: Southwestern Pakistan.
Depth: 0 km
Source: GeoScience Australia


1 comment:

  1. உண்மையான தகவல்கள் இனியும் இது போல் நடக்காமல் இருக்க வேண்டும் துவா செய்வோம்

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here