மார்ச் 26: முத்துப்பேட்டையில் உள்ள பேட்டை பள்ளி வாசல் அருகில் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ரஹ்மத் அம்மாள், இவருக்கு சொந்தமான குப்பை கொல்லை கோரையாற்று கரையோரம் உள்ளது. 26.03.2013 அதிகாலை 2.30 மணிக்கு அருகில் இருந்த வீட்டு பெண் சிறுநீர் கழிப்பதற்காக கொல்லைக்கு சென்ற போது, பெண் சடலம் ஒன்று எரித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அவர்கள் வருவதற்குள் அப்பகுதியினர் தீயினை அணைத்தனர். சடலம் தலை, நெஞ்சு பகுதி மட்டும் சரியாக எரியாமல் நெஞ்சுக்கு கீழ் உள்ள பகுதிகள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பெண் யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் நாகப்பட்டினம் லெஸி வந்து பல தெருக்களில் ஓடியது. கைரேகை நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்த பெண் அதே பகுதியில் குடியிருக்கும் மறைந்த சாகுல்ஹமீது மனைவி அஹமது அம்மாள் (55) என்று தெரிய வந்தது. இவரது மகன் ஹபீப் கான் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவருக்கு திருமணமான முதல் மனைவி லத்தீபா சென்ற ஆண்டு உடல் நல குறைவால் இறந்து போனார். இவர்களுக்கு கஜாலி (19), மஜீரா (18), அல்பியா (8) மூன்று குழந்தைகள் உள்ளது. ஹபீப் கானுக்கு இரண்டாவதாக ஷர்மிளா என்ற பெண்ணை திருமணம் செய்யப்பட்டதால், முதல் மனைவியின் மூன்று பிள்ளைகளும் ஷர்மிளாவும் துணையாக அஹமது அம்மாவும் ஒரே வீட்டில் இருந்து வந்தனர். இறந்ததற்கான காரணம் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது குடும்ப தகராறா..? என்ற ரீதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்து போன அஹமது அம்மாள் மருமகள் கொடுமை நடத்தி வருவதாகவும், முதல் மருமகளுக்கு கிடைக்க வேண்டிய வாரிசு சான்றிதழ் கிடைக்க வில்லை என்ற மனஉளைச்சல்களை உறவினர்களிடம் புலம்பியதாக தெரிகிறது.
மேலும், இறந்த போன சடலம் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் உள்ளது. மேலும், சடலத்தின் நாக்கு தள்ளப்பட்டு கண்களிலிருந்து இரத்தம் வழியப்பட்டு உள்ளதால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு அதனை மறைப்பதற்காக குப்பை மேட்டில் வைத்து எரித்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து, முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
NEWS PARTNER MUTHUPET.ORG
No comments:
Post a Comment