ஜனவரி 26: உலகின் மோசமான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பட்டியலில், மத்திய அரசின் 'ஏர் இந்தியா' நிறுவனம் மூன்றாம் இடத்தை வகித்துள்ளது.
உலக அளவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் (JACDEC - Jet Airliner Crash Data Evaluation Centre), பாதுகாப்பு மற்றும் வசதிகள் அடிப்படையில் டாப் 60 விமானப் போக்குவரத்து நிறுவனங்களைப் பட்டியல் இட்டுள்ளது.
அதில், மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் 58-வது இடத்தையே வகித்துள்ளது. உலகின் பாதுகாப்பான விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் ஃபின் ஏர் (Finnair) முதலிடம் பெற்றுள்ளது. ஏர் நியூஸிலாந்து, கேத்தி பசிபிக் மறும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
No comments:
Post a Comment