ஈரான் தாக்கப்பட்டால் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்: ஹிஸ்புல்லா.. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 4

ஈரான் தாக்கப்பட்டால் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்க படைகளும் பேரழிவை சந்திக்கும்: ஹிஸ்புல்லா..


செப்டம்பர் 04: ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை மட்டுமல்ல மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகள் மீதும் அந்நாடு தாக்குதல் நடத்த முடிவு செய்திருக்கிறது என்று லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டு தொலைக்காட்சி அல்- மைதீனுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நிச்சயமாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அந்நாடு தாக்குதல் மேற்கொள்ளும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அமெரிக்காவுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தாலும் கூட அமெரிக்கா ராணுவ தளங்களைத் தாக்கும். குறிப்பாக இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மத்திய கிழக்கில் இருக்கும் அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையுமே ஈரான் தாக்கும். ஏனெனில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும்.
ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால் அது மிகப் பெரும் பாதிப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும். தங்களது அணு ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதலை ஈரான் மன்னித்துவிடாது.

ரசாயன ஆயுதங்கள்?
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் ஏற்படுமேயானால் இஸ்ரேல் முழுவதையுமே தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகளை எமது இயக்கம் பயன்படுத்தும். இதற்காக ரசாயான ஆயுதங்களோ அணு ஆயுதங்களோ எங்களுக்குத் தேவையில்லை. எங்களிடம் அணு ஆயுதங்களும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற ஏவுகணைகளே போதும் என்றார் அவர்

ஹிஸ்புல்லா இயக்கம்
லெபனானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத இயக்கம் ஹிஸ்புல்லா அமைப்பு. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் மீது பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வரும் இயக்கம்.
ஈரானிடமிருந்து ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றுக் கொள்கிறது ஹிஸ்புல்லா என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. ஈரான் தாக்கப்படும் போது இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கமும் தாக்குதல் நடத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here