செப்டம்பர் 18: உலகமுஸ்லிம்களின் ஒப்பற்ற நாயகர் ,புரட்சி தலைவர் முஹம்மது நபியை இழிவாக சினிமா எடுத்த அமெரிக்காவின் யூத பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ் மற்றும் அதை ஆதரித்து பேசிய ஹிலாரி கிளிண்டனை கண்டித்தும் ,இதனை கண்டித்து தமிழக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகை இட்டனர் .
திருவல்லிக்கேணி ,ராயப்பேட்டை ,எழும்பூர் ,மக்கா மஸ்ஜித் போன்ற இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர் .
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது ..இதனால் அண்ணாசாலையில் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது காவல்துறை அமைத்திருந்த தடுப்புவேளிகளையும் தாண்டி நாரே தக்பீர் ,அல்லாஹ் அக்பர் என்ற இறைமுழக்கதுடன் முன்னேறி சென்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
எச்சரிக்கை ,எச்சரிக்கை அமெரிக்காவே எச்சரிக்கை என்ற முழக்கம் விண்ணை அதிரசெய்யும் அளவிற்கு இடியை காட்டிலும் கம்பீரமாய் வெடித்தது.
கூட்டம் கட்டுகடங்காமல் அமெரிக்க தூதரகத்தை நோக்கி முன்னேறி சென்றதையடுத்து திடீரென கூட்டத்திற்குள் நுழைந்த அதிரடிபடையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது.
இந்த போராட்டத்தில் 25 கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றன. கருத்து வேறுபாடுகள் குடிகொண்டிருக்கும் நம் சமுதாயத்தில் ,ஒரே இலக்கிற்காக பல இயக்கங்கள் ஒரே அணியில் திரண்டிருப்பதை கண்டு நம் எதிரிகளும் , இந்திய தமிழக அரசியல் வாதிகளும் புருவத்தை உயர்த்தியுள்ளனர் .
இன்ஷா அல்லாஹ் வருங்காலங்களிலும் இதுபோன்று நாம் சேர்ந்து செயல்பட்டால் நம்மை கண்டு எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள்; அல்லாஹு அக்பர் ....அல்லாஹு அக்பர் .........
No comments:
Post a Comment