முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்தின் ஆலோசனைக்கூட்டம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 12

முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்தின் ஆலோசனைக்கூட்டம்.


அனைத்து முஹல்லா ஆலோசனைக்கூட்டம்
செப்டம்பர் 12: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து முஹல்லாவின் ஆலோசனைக்கூட்டம் 12.09.2012 மாலை 5 மணியளவில் புதுப்பள்ளி வாசல் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கான தலைமையினை எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் அவர்கள் ஏற்றார்கள்.
முத்துப்பேட்டையை சார்ந்த அனைத்து பள்ளி வாசல்களின் தலைவர், செயலாளர் மற்றும் முஹல்லாவை சார்ந்த அனைவரும் கலந்துக்கொண்டனர்.
நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட அரிசியினை கள்ள மார்கெட்டில் விற்பதற்கு புதுப்பள்ளி வாசல் நிர்வாகம் முயற்சி செய்கிறது என்ற தவறான புகார் ஒன்றினை 01.09.2012 அன்று S.K.M.F. நவாஸ்கான் என்ற தனி நபர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். இதில் எந்தவிதமான ஆதாரமும் அவர் தரப்பிலிருந்து வைக்க முடியவில்லை.
(01.09.2012 அன்று ஏழைக்கு அரிசி பகிர்ந்தளிக்கப்பட்டது என்ற செய்தியினை நமது இணையத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருந்தோம் என்பதினை அனைத்து வாசக நெஞ்சங்களும் அறிந்து இருப்பீர்கள்).
ஆலோசனைக்கூட்டம் நடத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் தவறான புகார் கொடுத்த நபரினை புதுப்பள்ளிக்கு அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி, புதுப்பள்ளி வாசல் சார்பாக ஆள் சென்றார். எந்த காரணத்திற்கான என்னை அழைக்கிறீர்கள், அது சம்மந்தமாக எனக்கு கடிதம் தந்தால் தான் நான் வருவேன் என்று கூட்டத்திற்கு வருவதற்கு மறுத்து விட்டார்.
அனைத்து முஹல்லா சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் வராத அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மினிட் புத்தகத்தில் கலந்துக்கொண்ட அனைவரிடமும் ஒப்புதல் பெறப்பட்டது.

தகவல்: முத்துப்பேட்டை.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here