அதிரை அருகே பறவைகளை வேட்டையாட சென்றபோது ஏற்பட்ட விபரிதம் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 1

அதிரை அருகே பறவைகளை வேட்டையாட சென்றபோது ஏற்பட்ட விபரிதம்


செப்டம்பர் 01: அதிரையை அடுத்த  பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளி.

இவர்கள் அதிரை,தம்பிகோட்டை, முத்துபேட்டை  போன்ற  சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள்.

இவ்வாறு வேட்டையாடுவதற்காக தங்களுடைய லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை கணேஷ் என்பவர் எடுத்து அதில் வெடி பொருட்களை நிரப்ப துடைத்துக்கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராமல் தனது கை பிஸ்டல் மீது பட்டுவிட்டது. அதில் இருந்து சீறிப்பாய்ந்த துப்பாக்கி குண்டு எதிரே நின்ற அவருடைய நண்பர் தங்கவேலின் மார்பில் பாய்ந்தது. இதில் மார்பிலிருந்து ரத்தம் வந்த நிலையில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து   பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து அதிரை  காவல் துறை அதிகாரி செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

தகவல்: அதிரை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here