ஆகஸ்ட் 27: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், மக்கிப்போகாத பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ரந்தும் பேரூராட்சி மன்றம் வரும் ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் உபோயோகிக்க தடைவிதித்துள்ளது. இதனை விழிப்புணர்வூட்டும் வண்ணம் ஏற்கனவே முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தட்டிகள் எல்லா கடைகளிலும், முக்கிய இடங்களிலும் தொங்கவிடப்பட்டது.
அந்தவரிசையில் இன்றயதினம் 27-08-2012 பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியும் நடைபெற்றது. இந்த பேரணிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோ.அருணாச்சலம் தலைமை வகித்தார், நிர்வாக அதிகாரி நாகராஜன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.அப்துல் வஹாப், முத்துப்பேட்டை வர்த்தக கழகம் தலைவர் இரா.இராஜராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவ,மாணவிகள் உள்பட 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இது பொதுமக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
- - செய்தி மற்றும் புகைப்படம் பைசல், முத்துப்பேட்டை முகைதீன் மற்றும் தாவுது இப்றாகிம்
No comments:
Post a Comment