துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, August 6

துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்.










ஆகஸ்ட் 06: துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.


துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டிய
ில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.

திருக்குர்ஆனின் எந்த‌ப் ப‌குதியில் இருந்து எந்த‌ வ‌ச‌ன‌த்தைக் கேட்டாலும் அது எந்த‌ சூராவில் வ‌ருகிற‌து, எத்த‌னையாவ‌து ப‌க்க‌ம், அந்த‌ சூராவில் எத்த‌னை எழுத்துக்க‌ள், வ‌ச‌ன‌ம் இற‌ங்கிய‌ வ‌ர‌லாறு என‌ அனைத்துத் த‌க‌வ‌ல்க‌ளையும் எவ்வித‌ த‌ய‌க்க‌மும், யோச‌னையுமின்றி உட‌னுக்குட‌ன் தெரிவித்து வ‌ருவ‌து நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்றுள்ள‌ ந‌டுவ‌ர்க‌ளை வியக்க வைத்துள்ளது.


அந்த‌ மாண‌வனை ந‌டுவ‌ர்க‌ளும், பார்வையாளர்களும் மனம் மகிழ்ந்து வாழ்த்தின‌ர்.




16வது ஆண்டாக‌ ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ ச‌ர்வ‌தேச‌ குர்ஆன் மனனப் போட்டியில் இதுவ‌ரை இப்பொடியொரு திற‌மை மிகுந்த‌ மாண‌வ‌ரை பார்த்த‌தில்லை என‌ இப்போட்டிக்கான‌ ஏற்பாட்டுக் குழுவில் இட‌ம் பெற்றுள்ள‌ ஒரேயொரு இந்தியரான‌ த‌மிழ‌க‌த்தின் ம‌துக்கூரைச் சேர்ந்த‌ நூருல் அமீன் தெரிவித்துள்ளார்.


சில கூடுதல் தகவல்கள்:
சர்வதேச அளவிலான இப்போட்டியில் ஐரோப்பா, பங்களாதேஷ், ஜோர்டான், இலங்கை, மாலி, டென்மார்க், உகாண்டா, இத்தாலி, இராக், பாகிஸ்தான், பஹ்ரைன், ஃபிலிப்பைன்ஸ், நைஜீரியா, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் தான்சேனியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. போட்டி நடைபெறுவது ரமளான் மாதம் என்பதால் தினசரி இரவு 10.30 மணிக்கு துவங்கும் இப்போட்டி ரமளான் 20 வரை தெய்ரா – துபையில் தொடர்ச்சியாக நடக்கவுள்ளது.


இதில், கஜகஸ்தானிலிருந்து கலந்து கொண்ட ஒன்பது வயது சிறுவன் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த கண் பார்வை இழந்தவர் உட்பட பல்வேறு நாட்டிலிருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலையை அடையும் வெற்றியாளர் இந்திய ரூபாய் மதிப்பில் 30 இலட்ச ரூபாய்களை பரிசுத் தொகையை வெல்வார். தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் போட்டியாளர்களுக்குப் பல லட்ச ரூபாய்களில் பல்வேறு பரிசுத் தொகைகள் காத்திருக்கின்றன.
திருக்குரானின் சிறப்புகள் மற்றும் குர்ஆனை மனனம் செய்து அழகிய முறையில் ஓதக்கூடிய திறமையை வெளிக் கொண்டு வரும் முகமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ள வாசகர்கள், குர்ஆன் போட்டி நடைபெறும் இணைய தளத்தையோ (www.quran.gov.ae) மின் முகவரியையோ ( quran@eim.ae) அல்லது தொலைபேசியையோ  (04-2610666) அணுகலாம்.




நமது முத்துப்பேட்டை பிபிசியில் துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு...
http://muthupettaibbc.blogspot.com/p/dubai-international-holy-quran-award.html

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here