ஆகஸ்ட்04: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் ப்ளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம் அவர்கள் தலைமையில் நடந்தது. இதில் நிர்வாக அதிகாரி நாகராஜன், பேரூராட்சி மன்றத் துணை தலைவர் எம்.அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவன்சிலர்களும் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வுக்கூட்டத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் பேசும்பொழுது குப்பைகளில் 10 சதவீதம் ப்ளாஸ்டிக் கழிவு உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும், கால்நடைகளின் உயிர்களுக்கு பாத்திப்பை ஏற்படுத்துபவையாகவும் மற்று மாசுக்கட்டுபாடு ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது. மேலும் சூடான பொருள்களை பார்சல் செய்வதாலும் அதன் மூலம் சாப்பிடுவதாலும் உடலுக்கு ஆபத்தும் ஏற்படுகிற அவலங்கள் பற்றி எடுத்துரைத்து பேசினார். இதனை கருத்தில் கொண்டு வருகிற ஆகஸ்ட் 31 முதல் முத்துப்பேட்டையில் ப்ளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தகூடாது என்று பேரூராட்சி மன்றத்தில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தகவல்: பைசல் ஜிஹாத், முத்து மைந்தன்
No comments:
Post a Comment