ஜுன் 2: கிரிக்கெட் உலகில் 20 ஓவர் போட்டிகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளுக்கு போதிய வரவேற்பு இல்லாமல் இருக்கிறது.
இதனை சரிசெய்வதற்காக கிளைவ் லாயிட் தலைமையிலான கிரிக்கெட் வல்லுனர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு செய்து, தனது பரிசீலனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) ஒப்படைத்தது.
இக்குழுவின் பரிசீலனைகளாவது;
* ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் ஒரு பவுன்சர் மட்டுமே வீசி வந்தனர். இனி இரண்டு பவுன்சர்கள் வீச அனுமதி. இதனால் பந்து வீச்சாளர்கள் 'நோ பால்' பிரச்சினை இன்றி பந்து வீசலாம்.
* 20 ஓவர்களாக இருந்த பவர் பிளே 15 ஓவர்களாக குறைக்கப்பட வேண்டும். இதனால் பந்துவீச்சு பவர்பிளே ரத்து செய்யப்படுகிறது.
* 30 யார்ட்ஸ் சுற்றளவுக்கு வெளியே பவர் பிளே அல்லாத ஓவர்களில் 5 பீல்டர்கள் இருக்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. இனி 4 பீல்டர்கள் மட்டுமே நிற்க வேண்டும். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன் குவிக்க முடியும்.
* மழை வந்தால் கடைபிடிக்கப்படும் டக் வொர்த் லூயிஸ் முறைக்கு பதிலாக, இந்திய கணிதத்துறை வல்லுனரான வி. ஜெயதேவன் கண்டுபிடித்திருக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த பரிந்துரை செய்யலாம்.
வரும் ஜூன் 26-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற உள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தின் முடிவில் மேற்குறிப்பிட்ட புதிய முறைகள் அமல்படுத்துவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment