IPL கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று: ஐ.பி.எல். கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா? சென்னை.... - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, May 27

IPL கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று: ஐ.பி.எல். கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா? சென்னை....

மே. 27: 5-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியின் உச்சக்கட்ட பரபரப்பை ரசிகர்கள் இன்று காணலாம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 முறை தொடர்ந்து ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலிமினேசன், ‘குவாலிபையர்-2’ போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய விதத்தை பார்க்கும்போது சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இதுவரை நடந்த 4 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை கோப்பையை (2010, 2011) வென்று இருக்கிறது. 2008-ம் ஆண்டு ராஜஸ்தானிடம் தோற்று 2-வது இடத்தை பிடித்தது.

ஐ.பி.எல். போட்டியில் பலம் வாய்ந்த சென்னை அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணியின் பேட்டிங்கில் முரளி விஜய், பிராவோ, கேப்டன் டோனி, அல்பி மோர்கல், மைக் ஹஸ்ஸி ஆகியோரும், பந்து வீச்சில் அஸ்வின், ஹில்பெனாஸ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. சேப்பாக்கம் ஆடுகள சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் கொல்கத்தா அணியில் உள்ளனர்.

கேப்டன் காம்பீர், மெக்குலம், காலிஸ், யூசுப் பதான், சுனில் நரேன், மனோஜ் திவாரி போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். சுழற்பந்து வீரர் சுனில் நரேன் அந்த அணியின் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் 24 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார். அவரது பந்துவீச்சை சென்னை அணி சமாளித்து விட்டால் நமக்குதான் கோப்பை.

சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை காணும் உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள் உள்ளனர். இன்றைய ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு ‘சூப்பர் சன்டே’யாக இருக்கும். சென்னையின் அனைத்து சாலைகளுமே சேப்பாக்கத்தை நோக்கியே இருக்கும்.

சூப்பர்கிங்ஸ் வீரர்கள் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். ‘லீக்’ சுற்றில் சிறப்பாக விளையாடி சென்னை அணி 17 புள்ளிகள் பெற்று மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்ததால் சூப்பர் கிங்சுக்கு பிளேஆப் அதிர்ஷ்டம் கிடைத்தது.

ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூர் அணிகளின் தோல்வியால் சென்னை அணிக்கு அதிர்ஷ்டம் வந்தது. ‘பிளேஆப்’ சுற்றில் சென்னை வீரர்களின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. மும்பை, டெல்லி அணியை நசுக்கி இறுதிப் போட்டிக்கு நுழைந்ததால் சென்னை அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

இன்றைய இறுதிப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் கொல்கத்தாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here