மே. 20: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 4-ந்தேதி தொடங்கியது. இதில் 9 அணிகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். ஒவ்வொரு அணியும் 16 போட்டியில் விளையாட வேண்டும். மொத்தம் உள்ள 72 ஆட்டத்தில் நேற்றுடன் 70 ஆட்டம் முடிந்தது. இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளது.
புனேயில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 34 ரன்னில் புனே வாரிர்ஸ் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா அணி பெற்ற 10-வது வெற்றியாகும். 5 ஆட்டத்தில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை 21 புள்ளிகளுடன் அந்த அணி 2-வது இடத்தை பிடித்தது.
புனே வாரியர்ஸ் அணி தொடர்ந்து 9-வது தோல்வியை சந்தித்தது. புனே வாரியர்ஸ் 16 ஆட்டத்தில் 4 வெற்றி 12 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் இன்று பெங்களூர் அணியுடன் மோதும் ஆட்டத்தில் முடிவை பொறுத்து புனே 8-வது இடத்தில் இருக்குமா அல்லது கடைசி இடத்தை பிடிக்குமா என்பது தெரியவரும்.
இந்தப்போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 16 ஆட்டத்தில் 11 வெற்றி, 5 தோல்வியுடன் 22 புள்ளி கள் பெற்று புள்ளிகள் பட்டிய லில் முதல் இடத்தை பிடித்தது. பிளேஆப் சுற்றின் முதல் குவாலிபயரில் முதல் இடத்தை பிடித்த டெல்லி டேர்டெவில்ஸ்- 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் வருகிற 22-ந்தேதி புனேயில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி சென்னையில் 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
புள்ளிகள் பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் ஒரு அணி மும்பை. மற்றொரு அணி பெங்களூரா? அல்லது சென்னையா? என்பது இன்று தெரியும். இந்த ஆட்டம் 23-ந்தேதி பெங்களூரில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.
டெல்லி- கொல்கத்தா மோதும் ஆட்டத்தில் தோற்கும் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் (குவாலிபையர் 2) மோதும். இந்த ஆட்டம் 25-ந்தேதி சென்னையில் நடைபெறும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
No comments:
Post a Comment