மே 24: இவ்வாண்டு ஹஜ் பயணத்திற்கான விமானக் கட்டணம் கடந்த ஆண்டை விட நான்காயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு விமானக் கட்டணமாக ஒவ்வொரு புனித பயணியும் அளித்தது 16 ஆயிரம் ரூபாய் ஆகும். இவ்வாண்டு ரூ.4 ஆயிரம் அதிகமாக செலுத்தவேண்டும்(ரூ.20 ஆயிரம்).
மீதமுள்ள தொகையை ஹஜ் மானியமாக வழங்கப்படும். ஹஜ் மானியத்தை படிப்படியாக ரத்துச்செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் வேளையில் படிப்படியாக விமானக் கட்டணத்தை உயர்த்தி அதனை ஹஜ் புனித பயணிகளிடமிருந்து வசூலுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு விமானக்கட்டணம் ரூ.12 ஆயிரம் ஆகும். பின்னர் ரூ.16 ஆயிரமாக உயர்ந்தது. தற்பொழுது ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத்சிங் தலைமையில் நடந்த ஹஜ் விமான சேவை தொடர்பான கூட்டத்தில் இவ்வாண்டு விமானக் கட்டணமாக புனித பயணிகளிடமிருந்து ரூ.20 ஆயிரம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டது.
ஹஜ் பயணக்கட்டணம் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சவூதி ரியாலின் மதிப்பு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இவ்வாண்டு ஹஜ்ஜிற்கான செலவுகள் அதிகரிக்கும்.
ஹாஜிகள் தங்கும் கட்டிட வாடகை, புனித கடமையை நிறைவேற்றும் வேளையில் சவூதி அரசுக்கு செலுத்தும் கட்டணம் ஆகியவற்றை இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் ஹஜ் செலவு அதிகமாகும்.
க்ரீன் பிரிவில் விண்ணப்பம் அளித்து அரசு மூலமாக ஹஜ்ஜிற்கு சென்று வரும்பொழுது ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தொகை செலவாகும்.
No comments:
Post a Comment