மார்ச்.5- ஓமனில் நடந்த விபத்தில் 6 இந்தியர்கள் தீயில் கருகி பலியானார்கள். இந்தியாவை சேர்ந்த பலர் ஓமன் நாட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்காக 6 பேர் ஒரு டிரக்கில் புறப்பட்டு சென்றனர். இந்த டிரக் மஸ்கட்டில் உள்ள மமூர் நகரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு டிரக் இவர்களது டிரக் மீது மோதியது. இதனால் டிரக்குகள் தீப்பிடித்து எரிந்தன. அதில் சிக்கியவர்கள் அலறி துடித்தனர். உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில், 6 இந்தியர்கள் பரிதாபமாக இறந்தனர். அவர்களது பெயர் அனில்குமார் சதானந்தன் (35), விஷ்ணுபார்கவன் வில்லப்பில் (42), பிரசாத் பாலகிருஷ்ணபிள்ளை (34), சஜிகுமார் உன்னி கிருஷ்ணன்பிள்ளை (29), ஜோகன்சன் அனில் (43) மற்றும் தாஸ். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர மற்றொரு டிரக்கில் பிடித்த தீயில் சிக்கி 2 பேர் காயம் அடைந்தனர்.
ஓமனை சேர்ந்த அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே தீயில் கருகி பலியானவர்களின் உடலை இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

No comments:
Post a Comment